Sunday, November 13, 2011

ஆசிரியர்களுக்கிடையிலான கிரிக்கெட்


(எஸ்.எம். அறூஸ்)  
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய ஆசிரியர்களுக்கும் அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய ஆசிரியர்களுக்குமிடையே சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் போட்டியொன்று அண்மையில் அந்நூர் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டி நிகழ்ச்சிக்கு பிரதம அதிதிகளாக அறபா வித்தியாலய அதிபர் கிதுறு முஹம்மட் மற்றும் அந்நூர் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல். யாசீன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அத்துடன் கூடுதலான ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர். 



0 comments:

Post a Comment