Monday, November 14, 2011

இணையக் கட்டுப்பாட்டை தளர்த்தும் அரசு


(பஹமுன அஸாம்)  
தடை செய்யப்பட்ட இணைய தளங்களை கடுமையான ஒப்பந்தங்களுக்கு மத்தியில் மீண்டும் வழங்க இலங்கை அரசு ஆலேசனைகளை மேற்கொண்டு வருகிறது. அரசினதோ தனிநபரினதோ சுய கௌரவத்தைப் பாதிக்காத விதத்தில் ஊடங்கள் செயற்படவேண்டும். இக்கொள்கைக்கு மாற்றமாக சில ஊடகங்கள் ஊடக தர்மத்தையும் மீறி தான்றோன்றித் தனமாக செய்திகளை வெளியிடுகின்றன. சில செய்திகள் ஒருவரினதோ ஒரு குழுவினதோ சுய கொளரவத்துக்கு பாதகம் எற்படும் என்றிருந்தாலும் சில ஊடகங்கள் அது பற்றி அக்கறை காட்டுவதாய்த் தெரியவில்லை.

இதில் முக்கியமாக இணையதளங்களைக் குறிப்பிடலாம். தற்போது இணைய செய்தித் தளங்கள் குவிந்து காணப்படுகின்றன. ஆனால், அத்தளங்கள் எங்கிருந்து இயங்குறது. யாரின் கீழ் இயங்குகின்றது, எந்த நாட்டில் இருந்து செயற்படுகின்றது என்பது குறித்து யாருக்கும் தெரியாது. பொதுவாக இலங்கை பற்றிய செய்திகளை வெளியிடும் பல இணையத்தளங்கள் வெளிநாடுகளில் இருந்தே அதிகளவில் இயங்குகிறமை குறிப்பிடத்தக்கது.

விளம்பரங்களைப் பெற்றுக்கொண்டு தன் இஷ்டத்து செய்திகளைக் களவாடியும், கொப்பியடித்தும் இணையத்தளங்களை நடத்துவோர் நம் மத்தியில் இல்லாமல் இல்லை. இவர்களுக்கு செய்தி எங்கிருந்து வருகிறது, இது யார் வழங்கிய செய்தி என்பது கூடத் தெரியாமல் இருக்கும். ஆனால், இணையத்தளத்தில் பிரசுரிப்பார்கள். உண்மையை எழுதுவதில் பிரச்சினையில்லை. ஆனால், உண்மையை உண்மையில்லாமல் எழுதுவது பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment