(பஹமுன அஸாம்)
தற்போது பாடசாலைகளில் தற்காலிகமா சேவையாற்றிக் கொண்டிருக்கும் அதிபர்களுக்கு நிரந்த நியமனம் வழங்கினால் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்போம் என இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்காலிக அதிபர்களை நிரந்தரமாக்கும் முகமாக நடாத்தப்படும் பரீட்சையில் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் தகுதிபெறவில்லை.
ஆனால், இவர்கள் அரசியல் பலத்துடன் பதவியை நிரந்தரமாக்கிக் கொள்ள முனைகிறார்கள். இவ்வாறு தகுதியற்றோரர் நிரந்தரமாக்கப்படும் பட்சத்தில் அதற்கு தகுந்த சட்ட நடவடிக்கையினை எடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment