Friday, November 11, 2011

தெலுங்கில் தாரளம் காட்டும் அமலாபால்


தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இவர் நடிப்பில் வெளிவந்த மைனா, தெய்வத்திருமகள் போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இவருக்கென ரசிகர் கூட்டம் உருவாகும் நிலையில், தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யாவின் ஜோடியாக 'வேட்டை' படத்திலும், அதர்வா ஜோடியாக 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்திலும் நடித்து வருகிறார்.  

தெலுங்கில் முதன் முறையாக நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவின் ஜோடியாக 'BEJAWADA' படத்தில் நடித்து வருகிறார் அமலா பால். அப்படத்தின் படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தமிழில் இதுவரை குடும்பப் பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்தவர் தெலுங்கில் கவர்ச்சி மழையில் நனைய வைக்கிறாராம்.

அமலாபாலுக்கு தமிழிலும் மார்கெட் இருப்பதால், அப்படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.


0 comments:

Post a Comment