தெலுங்கு படமான 'ஓ மை பிரண்ட்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சியில் தன் அம்மா சரிகாவுடன் வந்திருந்தார் ஸ்ருதிஹாசன். கமலஹாசனின் முதல் மனைவி வாணி கணபதி. இவர்கள் இருவரும் திருமணமான சிறிது காலத்திலேயே அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரிந்துவிட்டனர்.
அதன்பின் கமல் சரிகாவை காதலித்து மணம் புரிந்தார். கமலுக்கும் சரிகாவுக்கும் பிறந்தவர்கள் ஸ்ருதிஹாசனும், அக்ஷராவும். கமல், சரிகா ஜோடி திடீரென சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விட்டனர். அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளாமல் தனித் தனியே வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது கமல் மற்றும் அவரது மகள்களை நடிகை கௌதமி பராமரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சித்தார்த் மற்றும் நவ்தீப் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘ஓ மை ஃபிரெண்ட்' என்ற தெலுங்கு படத்தின் சிறப்புக் காட்சிக்கு தன் தாயார் சரிகாவுடன் வந்தார் ஸ்ருதிஹாசன்.
இருவரும் படம் பார்த்து மகிழ்ந்தனர். இப்படத்தின் சிறப்புக் காட்சியில் தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகர்,நடிகைகள் கலந்து கொண்டு படத்தை ரசித்தனர்.


0 comments:
Post a Comment