Sunday, November 13, 2011

இன்று சர்வதேச நீரிழிவு தினம்


(எஸ்.எல். மன்சூர்)  
இன்று திங்கட்கிழமை சர்வதேச நீரிழிவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இலங்கையில் 10 சதவீதமானோர் இந்நோய்க்கு ஆளாகியுள்ளதாகவும், மேலும் பத்து சதவீதமானோருக்கு இந்நோய் தொற்றக் கூடிய அபாயம் இருப்பதாகவும் சுகாதர அமைச்சு தெரிவிக்கின்றது. இந்நோய் தொற்றாமலிருக்க உடல்நிறையில் கட்டுப்பாடும், சரியான உணவுப் பழக்கங்களும், சிறந்த உடற்பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கூறப்படுகிறது.

இன்று பாடசாலைகளில் காலையில் மாணவர் தேக அப்பியாசங்கள், மதிய உணவு வழங்குதல், மாணவர்களின் நிறைகளை அளவீடு செய்தல் போன்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் சரியான முறையில் உடற்பயிற்சிகளும், மற்றும் உணவு, உடல்நிறை போன்றவற்றிலான கவனிப்புக்களும் எதிர்காலத்தில் இந்நோய் பீடிக்கைக்குள்ளாகக்கப்படும் நிலை தோற்றம் பெறுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றதா என்பதை சரியான முறையில் பாடசாலையின் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டிய கடப்பாடுகளை கொண்டுள்ளார்கள்.

இளம் பராயத்திலிருந்து ஒழுங்கு முறையான பயிற்சிகளை வழங்கி வருகின்றபோது நாட்டில் நீரிழிவு நோயிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஏதுவாக அமையுமல்லவா.

0 comments:

Post a Comment