Tuesday, November 15, 2011

ஐஸ்வர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது


நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது. நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார் என்று என்றைக்கு அவரது மாமனார் அமிதாப் அறிவித்தாரோ அன்றில் இருந்து ஊடகங்களின் பார்வை ஐஸ்வர்யா மீது தான்.

நவம்பர் இரண்டாம் வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் அறிவித்ததில் இருந்து ஐஸ்வர்யாவின் ரசிகர்களும், மீடியாக்களும் எப்பொழுது குழந்தை பிறக்கும், என்ன குழந்தை பிறக்கும் என்று டென்ஷனாக சுற்றிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யவை பிரசவத்திற்காக மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. கடந்த 11.11.11 ஆம் திகதி ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறக்கும் என்று ஆளாளுக்கு பந்தயம் கட்டினர். இறுதியில் இன்று காலை அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இன்று அதிகாலை 4 மணிக்கு அவருக்கு பிரசவ வலி எடுத்தது. இதையடுத்து அவர் பிரசவ வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். 10 மணி அடிக்க சில நிமிடங்களே இருக்கையில் அவருக்கு சுக பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து அபிஷேக், அமிதாப் ஆகியோர் டுவிட்டரில் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா, அபிஷேக்.

0 comments:

Post a Comment