Thursday, November 03, 2011

தனியார் பஸ்கள் அரசுக்கு காலக்கெடு


"தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு பழைய விலைக்கோ, அல்லது மானிய அடிப்டையிலோ பெற்றோல் தருவதாயின் நாங்கள் பஸ் கட்டணத்தை அதிகரிக்க மாட்டோம்" என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார். நாரேண்பிட்ட பெண்கள் ஆய்வு மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது சம்பந்தமாக எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டும். இல்லாத பட்சத்தில் 15ஆம் திகதி ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார். மேலும், டீசல் விலை அதிகரிப்பினால் குறுந்தூர பஸ் சேவைக்கு நாளொன்றுக்கு 500-750 ரூபாவும் நெடுந்தூர பஸ் சேவைக்கு 1000-1250 ரூபா வரை நட்டம் ஏற்படுகிறது. அரச பஸ் சேவைக்கு மானியங்கள் வழங்கப்பட்டாலும் அவை தனியார் பஸ்களுக்கு வழங்கப்படுவதில்லை.

துருவம் செய்தியாளர் பஹமுன அஸாம்

0 comments:

Post a Comment