கடந்த வாரத்திலிருந்து கிழக்கு மாகாணம் உட்பட நாடுமுழுவதும் பரவலான முறையில் கனத்த மழை பெய்து வருகின்றது. இதனால் கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக நெல்வயல்கள் வெள்ளக்காடாய் காட்சி தருகின்றன.
தற்போது மழை குறைவடைந்திருந்தாலும் பாதிக்கப்பட்டுள்ள நெல்வயல்களை மீண்டும் ஒரு தடவை விதைக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் விவசாயிகள் உந்தப்பட்டுள்ளனர். இவ்வருட (2011) ஆரம்பத்தில் இப்பிராந்தியம் வெள்ளத்தினால் வயல்கள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்த போதிலும் அரசு முறையான நிவாரணங்களை வழங்கவில்லை என்றும் விவசாயிகள் குறைபடுகின்றனர்.
அதேபோன்று தற்பொழுது விதைத்த நெற்பயிர் மழைகாரணமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மீண்டும் நெல் சாகுபடி செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை விவசாயிகளுக்கு பலத்த கவலையை அளித்துள்ளது. அம்பாரை மாவட்டம் இலங்கையின் மொத்த நெல் உற்பத்தியில் சுமார் 35 சதவீதத்திற்குமேல் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
(மழை வெள்ளம் சற்று ஓய்வடைந்துள்ள நிலையில் வயல்களில் நீர் கொஞ்சம் குறைவடைந்துள்ள நிலையினையும், மீண்டும் நெல் விதைப்பதற்கான நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் இறங்க ஆயத்தமாய் உள்ளதையும், நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும் இப்படங்களில் காணலாம்.)
தென்கிழக்கு துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர்





0 comments:
Post a Comment