Monday, November 28, 2011

பைசர் முஸ்தபா முஹர்ரம் வாழ்த்துச்செய்தி


'சர்வதே சரீதியில் மக்கள் எதிர்நோக்கியிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இஸ்லாமிய வழிமுறையே சரியான தீர்வாகும். அல்லாஹ்வின் வேதமான அல்-குர்ஆனையும் அவனின் தூதர் முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கையான ஹதீஸையும் சரியாகப் பின்பற்றும் எந்தவொரு சமூகமும் தோல்வியடையாது.' இவ்வாறு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா இஸ்லாமிய புது வருடமான முஹர்ரம் மாத உதயத்தையொட்டி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மலர்ந்திருக்கும் இஸ்லாமிய புதுவருடத்தில் இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இஸ்லாம் கூறும் வழிமுறைகளின் ஊடாக எமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இத்தருணத்தில் நாம் உறுதிபூண வேண்டும்.

இன்று உலகில் உள்ள ஆட்சியாளர்களும் சாதாரண மக்களும் புது விதமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப புதுவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்வது எம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இந்த உலகம் தோன்றியது முதல் இன்றுவரை தோன்றிய, தோன்றிக் கொண்டிருக்கின்ற அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வுகள்  அல்-குர்ஆனிலும் ஹதீஸிலும் உள்ளன.

இன்று சர்வதேச நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை நாம் நன்கு அறிவோம்.இந்த பிரச்சனைகளை நன்கு ஆராய்ந்து பார்த்தால் இவற்றுக்கான முழுமையான தீர்வுகள் குர்ஆண் மற்றும் ஹதீஸ்களில் மட்டுமே உள்ளன. இவை முழுமையாகப் பின்பற்றப்பட்டால் முழு உலகமும் அனைத்துவிதமான பிரச்சினைகளில் இருந்தும் விடுபடும்.

எனவே, இஸ்லாம் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றி இன்மை மற்றும் மறுமை வாழ்வில் வெற்றி பெறுவோமாக.இந்த வாழ்க்கை முறை அனைவரிடமும் வரவேண்டும் என்று நான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.

0 comments:

Post a Comment