சவூதியில் மேலும் ஒரு இலங்கைப்பெண், ஆணிகள் அறையப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தப்பெண் கடந்த சனிக்கிழமையன்று சவூதி வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்
கடும் வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் உடலில் ஏழு ஆணிகள் அறையப்பட்டிருப்பதை கண்டுப்பிடித்துள்ளனர். தமது வீட்டு உரிமையாளரால் போதை தரும் மருந்து வழங்கப்பட்ட பின்னரே தமது உடலில் ஆணிகளை அறையப்பட்டதாக பாதிப்புக்கு உள்ளான பெண் குறிப்பிட்டுள்ளார்
பாலசுப்பிரமணியன் சசிகலா என்ற 22 வயதான இந்தப்பெண், சவூதியின் தம்மான் மத்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பணிப்பெண்ணாக சவூதி சென்றார். எனினும் தமது தொழில்தருனர் தம்மை சித்திரவதைகளுக்கு உள்ளாக்கவில்லை என்று சசிகலா குறிப்பிட்டுள்ளதாக அரப் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment