Sunday, November 13, 2011

கல்முனை மேயருக்கு பாராட்டு விழா


(எஸ்.எம். அறூஸ்)  
கல்முனை மாநகரசபை மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிராஸ் மீராசாஹிபை பாராட்டிக் கௌரவிக்கும் வைபவம் சாய்ந்தமருது கடற்கரை மைதானத்தில் பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி அப்துல் அஸீஸ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த இப்பாராட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசிர் சேகுதாவூத், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், மாகாண சபை உறுப்பினர் எம்.அப்துல் மஜீட் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் நசீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

புதிய மேயர் சிராஸ் பொன்னாடைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். அத்துடன் தனது சம்பளத் தொகையான 15 ஆயிரம் ரூபாவை வறிய குடும்பத்துக்கு அன்பளிப்பாக வழங்கினார். எதிர்காலத்திலும் ஒவ்‌வொரு மாத சம்பளத்தையும் ஒவ்வொரு வறிய குடும்பத்துக்கு வழங்கவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரத்தில் கல்முனை மாநகரசபை மூலம் கிடைக்கும் மாத சம்பளத்தினை வறிய குடும்பத்துக்கு வழங்குவேன்று என்று வாக்குறுதி அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதிகாலை 01 மணிவரை நடைபெற்ற இப்பாராட்டு விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

 
 
 


0 comments:

Post a Comment