Friday, November 25, 2011

வெள்ளத்திலுள்ளவர்களுக்கு படகு மீட்புபணி


(எம்.ஐ.எம்.அஸ்ஹர்) 
கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட துரைவந்தெய்திய மேடு மக்கள் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில் அவர்களை படகு மூலம் மீட்பதற்கான படகு சேவையினை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அவர்களின் உத்தரவின் பேரில் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதியின் பணிப்புரைக்கமைய இராணுவத்தின் உயர் அதிகாரி பிரிகேடியர் பிரசன்ன உட்பட்ட இராணுவ குழுவினர் அடங்கிய குழுவொன்று நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபை சந்தித்தது. இச்சந்திப்பானது வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ள கிட்டங்கி பாலத்தில் இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது வெள்ளம் சூழப்பட்டு பாதிக்கப்பட்டு நிர்கதிநிலைக்குள்ளாகியுள்ள துரைவந்தெய்திய மேடு கிராம மக்களை பாதுகாப்பான இடமான நற்பிட்டிமுனை கிராமத்திற்கு கொண்டுவருவதற்கான படகு சேவையினை இன்று காலை ஆரம்பிப்பதற்கு இராணுவத்தினரினதும் கடற்படையினரினதும் புரண ஒத்துழைப்பை நல்வதாக மேற்படி சந்திப்பில் கலந்து கொண்ட இராணுவத்தினர் கல்முனை மாநகர மேயரிடம் தெரிவித்தனர்.




0 comments:

Post a Comment