நடிகர் சைப் அலிகானுக்கும் தனக்கும் இப்போதைக்கு திருமணம் நடைபெறாது என்று நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார். பாலிவுட் பிரபல நடிகை கரீனாவும் நடிகர் சைப் அலிகானும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். அவர்கள் திருமணம் செய்ய தீர்மானித்திருந்த நிலையில் சைப் அலிகானின் தந்தை பட்டோடி இறந்து விட்டார். இதனால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்த சைப் அலிகான், ஏஜென்ட் வினோத் என்ற படம் வெளியானதும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறும். படம் வெளியிடுவது தாமதமானால் மார்ச்சில் நடக்கும் என்றார். ஆனால், கரீனா கூறியதாவது, சைப்புக்கும் தனக்கும் இன்னும் திருமண திகதி நிச்சயிக்கப்படவில்லை. என் திருமண திகதியையும், திருமண ஆடைகளையும், தேனிலவையும் எனக்கு தெரியாமல் என் ரசிகர்களே தீர்மானிக்கிறார்கள்.
இப்போது ஏஜென்ட் வினோத் படம் வெளிவருவது பற்றித்தான் முழு கவனம் செலுத்துகிறோம். திருமணம் பற்றி முடிவு செய்யவில்லை. நானும் சைப் அலிகானும் ஒருவரை ஒருவர் உளமார காதலிக்கிறோம். எனவே, திருமணத்துக்கு அவசரப்படவில்லை என்று கரீனா தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment