Wednesday, November 16, 2011

சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது


(கலாநெஞ்சன்)  
கட்டுநாயக்க எவரிவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 4 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோத மதுபான ஸ்பிரிட் 400 லீற்றர், 25 கிலோ கிராம் சீனியை கொண்ட 20 பரல்கள், 20 அடி நீளமான பைபர் கிளாஸ் படகு ஒன்று உட்பட மேலும் பல பொருட்கள் இந்த சுற்றி வளைப்பின்போது கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மீனுவாங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர்கள் கட்டுநாயக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment