Wednesday, November 30, 2011

அழகியற் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


(பஹமுன அஸாம்) 
கொழும்பு 7இல் அமைந்துள்ள அழகியற் கல்லூரியில் வகுப்புத் தடைவிதிக்கப்பட்டிருந்த மாணவர்களின் தடை உத்தரவை உடனடியாக நிறுத்தக்கோரி அழகியற் கல்லூரி மாணவர்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். 

இது தொடர்பாக துருவம் செய்திப்பிரிவு அழகியற் கல்லூரியின் மாணவர் தலைவர் துசித யாப்பா அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது, இவ்வருட இறுதிக்குள் விடுதிப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றத் தருவதற்கு நிர்வாகம் உடன்பட்டுள்ளதாகவும், வகுப்புத்தடை வழங்கப்பட்ட மாணவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.







0 comments:

Post a Comment