Wednesday, November 30, 2011

UNP எம்.பி. அரசுக்கு ஆதரவளிக்க தீர்மானம்


(கலாநெஞ்சன்)
அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிரோரு தீர்மானித்துள்ளார். 2012 ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்கப்போவதாக அவர் சற்றுமுன் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து மொஹான் லால் கிரோருவுடன் உரையாடினார். இவருக்கு பிரதி கல்வி அமைச்சு பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

அதேவேளை நேற்று கழுத்துப்பட்டியை கழற்றிக் கொண்டு சபையிலிருந்து வெளிநடப்பு செய்ததன் மூலம் பாராளுமன்றத்தை அவமதித்தமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்திலிருந்து இடைநிறுத்த வேண்டும் என்ற முன்மொழிவு இன்று காலை அரச தரப்பினரால் முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment