தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் விவகார மற்றும்திறன் அபிவிருத்தி அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடுசெய்துள்ள இளைஞர் சைக்கிளோட்ட சவாரி எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமாகும் இச்சவாரி மாத்தறையில் நிறைவுபெறவுள்ளது.இச்சவாரி தொடர்பான செய்தியாளர் மாநாடு அண்மையில் கொழும்பு சினமனகிரான்ட் ஹோட்டலில் இடம் பெற்றது.செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும .பிரதியமைச்சர் துமிந்த திசாநாயக்க. மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா,விளையாட்டுத்திணைக்களத்தின் பணிப்பாளர், தேசிய காப்புறுதி நிறுவனத்தின் தலைவர், முன்னாள் சைக்கிளேட்ட வீரர் ஆகியோரும் கலந்து கொண்டனர்
இப்போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு பரிசாக கார் வழங்கப்படும் என அமைச்சர் டழஸ் அழகப்பெரும் அறிவித்தார்கிழக்கு மாகணத்தில் இருந்து ஆரம்பிக்கும் இச்சைக்கிளோட்ட போட்டியானது 50 வருடங்களுக்குப் பின்னர் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.இச்சைக்கிளோட்ட போட்டியுpல் பங்கு கொள்ளும் அனைத்து வீரர்கள் மற்றும் அனைவருக்கும் 5 லட்சம் பெறுமதியான காப்புறுதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதேவேளை இச்சைக்கிளோட்டப்போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான காப்புறுதிப் பத்திரத்தை இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரிடம் காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் வழங்கினார்அதிதிகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த சைக்கிளேட்ட வீரர்களுடன் இணைந்து படம் எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment