இலங்கையின் போக்குவரத்துக்கு துறையில் வரலாற்று திருப்பு முனையை ஏற்படுத்தப்போகும் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையை ஜனாதிபதி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்துள்ளார். கொழும்பையும் காலியையும் இணைக்கும் இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை இதுவாகும். இதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மக்களின் பாவனைக்காக திறந்து வைத்துள்ளார்.
புதிய பாதையில் பயணிக்கும்போது பயணிகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாதாரண வாகனமொன்றிடமிருந்து 400 ரூபா அறவிடப்படவுள்ளது. இவ்வீதியில் துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், உழவு இயந்திரங்கள், பெளசர்கள் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டாது என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.











0 comments:
Post a Comment