(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 சீ 2 மாவட்ட கழக வருடாந்த ஒன்று கூடல் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது இந்நிகழ்வில் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டிய கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்களான நாவிதன்வெளி பிரதேச செயலாளர் கலாநிதி லயன் எம்.கோபாலரத்தினம், லயன் எஸ்.மகேஷன் ஆகியோரை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனை காரியாலயத்தில் தலைவர் லயன் கே.பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட கபினட் உப பொருளாளர் லயன் சிவகுரு சன்முகநாதன், வலய தலைவர் எஸ்.தைரியராஜா ஆகியோர் நினைவுச்சின்னம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.
0 comments:
Post a Comment