(எஸ்.எல். மன்சூர்)
பெரும்போகம் நெற்செய்கை பண்ணப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் அட்டாளைச்சேனை பிரதேச விவசாயிகளுக்கு இன்னும் உரம் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அரசின் உரமானியத் திட்டத்திற்கு அமைவாக பிரதேச விவசாய நிலையங்கள் ஊடாக விவசாயச் சங்களின் ஒத்துழைப்புடன் ரூ.350க்கு உரம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த சில வாரங்களாக கிழக்கில் மழை பெய்தமையினால் விவசாயிகளின் வயல்கள் நாசமாகி மீண்டும் விதைத்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை மேலதிகச் செலவும் ஏற்பட்டுள்ள நிலையில் தங்களது மீதமுள்ள நெற்பயிருக்கு உரிய காலப்பகுதியில் உரத்தை இடுவதற்கு விரைவில் உரத்தினை தந்துதவ வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

0 comments:
Post a Comment