
(பஹமுன அஸாம்)
பஸ்ஸிள் பயணித்த ஒரு யுவதிக்கு தனது கைடக்க தொலைபேசிய் இருந்த ஆபாசப் படங்களைக் காட்டி சேட்டை செய்த இளைஞனுக்கு 1½ வருடகால சிறை தண்டனையும் 1500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கும் மேற்படி யுவதி தனது வேலை முடிந்து வீடு திரும்பும் பஸ்சில் ஏறி, ஒரு ஆசனத்தில் அமர்ந்துள்ளார். அவர் உக்கார்ந்த அதே ஆசனத்தில் ஒரு இளைஞனும் வந்து அமர்ந்துள்ளார்.
சிறிது நேரத்தில் அந்த இளைஞன் தனது கையடக்க தொலைபேசியில் இருந்த ஆபாசப் படங்களை அந்த யுவதியின் கண்ணில் படும்படி காட்டியுள்ளார். இதனால் அந்த யுவதிதிக்கு அவமானமும் தர்மசங்கடமும் ஏற்பட்டுள்ளது. பஸ் கொள்ளுப்பிட்டிக்கு வரும்போது அந்த யுவதி பஸ்ஸில் இருந்த ஒரு சிலரின் உதவியோடு அந்த இளைஞனை பொலிஸில் பிடித்துக் கொடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment