Thursday, December 29, 2011

மகளிர் அமைப்புகளின் தலைவர்களுக்கான செயலமர்வு


(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
மகளிர் அபிவிருத்தி அமைச்சின் அனுசரனையுடன் சம்மாந்துறை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்திப் பிரிவினால் சுயதொழிலில் ஈடுபட்டுள்ள மகளிர் அமைப்புகளின் தலைவர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வு இன்று வியாழக்கிழமை சம்மாந்துறை சமூகப்பராமரிப்பு மையக் கட்டிடத்தில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.என்.எல்.பஸீலா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக், உளவளத்துணை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.ஜறூன், சமூகப்பராமரிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.சீ.எம்.நிஸாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment