
(எஸ்.ஜி.உதயா)
அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பில் உரிய வேலைத்திட்டமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் தேவையான ஆலோசனைகள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பில் புதிய வழிமுறைகள் பின்பற்றப்படவுள்ளன. அதற்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திலுள்ள சிவில் பொறியியல் திணைக்களத்தின் ஆலோசனைகள் பெறப்படவுள்ளதாக பெற்றோலிய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை வாகனங்களின் போக்குவரத்தும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கிடையிலான தூரம் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment