
2012 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது. நாட்டில் சகல அரச பாடசாலைகளுக்கும் மற்றும் மாகாண சபை பாடசாலைகளுக்கும் இதன்போது முதலாம் தரத்திற்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
முதலாம் தரத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியல் குறித்த பாடசாலைகளில் அறிவித்தல் பலகைகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வருட இறுதியில் குறித்த பெயர்ப் பட்டியல் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment