
(எஸ்.ஜி.உதயா)
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திற்கு மீண்டும் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சற்று முன்னர் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு ஒன்றுகூடலின்போது இடம்பெற்ற தேர்தல் வாக்கெடுப்பின் மூலம் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இம்முறை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றும் நோக்கில் தலைமைத்துவத்தை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பிரதித்தலைவர் கரு ஜயசூரியவும் போட்டியிட்டனர். இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவராக சஜித் பிரேமதாசவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவாளர்கள் தற்போது கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment