Monday, December 12, 2011

பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்க்ஸ் 188 ரன்களால் வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் யூனிஸ் கான் இரட்டை சதம் அடித்து கைகொடுக்க முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 594 ஓட்டங்கள் எடுத்தது.

வங்கதேசம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சிட்டகாங்கில் நடக்கிறது.
முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 135 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 415 ஓட்டங்கள் எடுத்திருந்தது. யூனிஸ் கான் 96 ஓட்டங்களுடனும், ஆசாத் ஷபிக் 40 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. பாகிஸ்தான் அணியின் யூனிஸ் கான், ஆசாத் ஷபிக் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தது. அபாரமாக ஆடிய ஆசாத் ஷபிக் டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 259 ரன்கள் சேர்த்த போது ஆசாத் ஷபிக் 104 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அசத்திய யூனிஸ் கான் டெஸ்ட் அரங்கில் மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்தார். முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 594 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. யூனிஸ் கான்(200), அத்னன் அக்மல்(6) ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் இலியாஸ் சன்னி 3 விக்கெட் வீழ்த்தினார்.பின் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால்(14) மீண்டும் ஏமாற்றினார். அடுத்து வந்த நபீஸ்(28), அஷ்ரபுல்(0), நாசிர் ஹொசைன்(3) பெரிய அளவில் சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய தொடக்க வீரர் நஜிமுதின், சாகிப் அல் ஹசன் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. 

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் வங்கதேச அணி 4 விக்கெட்டுக்கு 134 ஓட்டங்கள் எடுத்து 325 ஓட்டங்கள் பின்தங்கி இருந்தனர்.இன்று ஆட்டத்தை துவங்கிய பங்களாதேஷ் சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இதனை துடர்ந்து பாகிஸ்தான் ஒரு இன்னிங்க்ஸ் 188 ரன் பெற்று 2 -1 முன்னிலையில் உள்ளனர்.

0 comments:

Post a Comment