Monday, December 19, 2011

கலா வாவியின் வான் கதவுகள் 2 அடி உயரத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது


(எஸ்.ஜி. உதயா) 
கலா வாவியின் நீர்மட்டம் அதன் வான் கதவுளை தாண்டியுள்ளது. அதன் காரணமாக வாவியின் இரண்டு வான் கதவுகள் 2 அடி உயரத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் எம்.எச்.எம்.ஆர். பண்டார தெரிவித்துள்ளார்.

கலா வாவியின் அதிகளவான நீரை கலா ஓயாவிற்கு திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கலா ஓயா வீதி மற்றும் கல்னெவ வீதியில் 100 ஏக்கர் நிலப்பிரப்பு நீரினால் மூழ்கியுள்ளது.

கலா ஓயாவின் நீர் ராஜாங்கனை நீர்த்தேக்கத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளதால் குறித்த பகுதிகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக பொறியியலாளர் எம்.எச்.எம்.ஆர். பண்டார தெரிவித்துள்ளார். அதற்கமைய இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளை 6 அடி வீதம் திறந்துவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அத்துடன் அங்கமுவ வாவியின் 2 வான்கதவுகள் தற்போது 2 அடி வரைக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது. வாவிகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்குமாயின் அவை கலா ஓயாவிற்கு திறந்துவிடப்படுமென நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment