
தன்சானியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் பிரதான நகரமான டார் எஸ் சலாமில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது.
வெள்ளம் மற்றும் மழை காரணமாக நகரின் வர்த்தக நடவடிக்கைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. வீதிகள் பல வெள்ள நீரினால் மூடப்பட்டுள்ளதுடன், பாலங்களும் சேதமடைந்துள்ளதாக தன்சானியா தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நூற்றுக்கும் அதிகமானோர் தமது இருப்பிடங்களை இழந்துள்ளதுடன் பலர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை 1961 ஆம் ஆண்டின் பின்னர் தன்சானியாவில் பெய்து வரும் பலத்த மழையாக இது கருதப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் பருவப் பெயர்ச்சி மழை ஏனைய நகரங்களையும் பாதிக்குமென தன்சானியா வானிலை ஆராய்ச்சி நிலையம் எதிர்வு கூறியுள்ளது.


0 comments:
Post a Comment