
வியட்நாம், சீனா, மலேசியா போன்ற நாடுகள் தனியார் துறையோடு இணைந்து செயல்படுவதன் மூலமே தற்போதைய அபிவிருத்தியை பெற்றெடுத்துள்ளது. ஆகவே நமது நாட்டிலும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக தனியார்துறையோடு இணைந்து திமிங்கில மீன்களை பார்வையிடும் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை நாட்டின் வழமான எதிர்காலத்தின் ஒரு சிறந்த அடையாளமாகும்.
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கடற் படகுகளை பயிற்சியளிக்கும் வேலைகளில் ஈடுபடுத்துவது மட்டும் இல்லாமல் திமிங்கில மற்றும் டொல்பின் மீன்களை பார்வையிடும் சுற்றுலா வேலைகளை ஆரம்பிக்கும் மங்கள பயணத்தில் கலந்து கொண்டு இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் ஏற்பாடுகளின் மூலம் ஆரம்பித்த இம் மங்கள பயணம் காலி மீனவ துறைமுகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக பென்தோட்ட ரிச்சேட்ஸ் ருவர்ஸ் அன்ட் டிரெவல்ஸ் என்னும் தனியார் நிறுவனமும் உதவியது. அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் தொடர்ந்து பேசுகையில்;
இன்று சமுத்திர பல்கலைக்கழகம் தனது 12ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காக மிக தைரியமான முறையில் காலடியை வைத்துள்ளது. கடல் வளங்களை கடற் பொருளாதாரத்திற்காக சேர்த்துக்கொள்ளும் நோக்கத்துடன் இற்றைக்கு 12 வருடங்களுக்கு முன் நமது ஜனாதிபதி அவர்கள் மீன்பிடி மற்றும் நீர் வழங்கள் அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது தேசிய மீன்பிடி பயிற்சி நிலையத்தை ஆரம்பித்து வைத்தார். பிறகு இன் நிறுவனத்திற்கு தேசிய சமுத்திர பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டது.
சமுத்திர பல்கலைக்கழகத்திற்கு சொந்தமானதாக ஒரு கப்பல் மற்றும் 07 கடற் படகுகள் உள்ளது. வருடத்தின் எல்லா தினங்களும் இக்கப்பல்கள் பயிற்சி வேலைகளுக்காக பயன்படுவதில்லை. அதற்கு அமைய சமுத்திர பல்கலைக்கழகம் அரசாங்க திறைசேரிக்கு மட்டும் பாரமாக இருக்கும் நிறுவனமாக இருக்காமல், பணத்தை ஈட்டெடுக்கும் நோக்கத்துடன் இவ்வாறான திமிங்கில மற்றும் டொல்பின் மீன்களை பார்வையிடும் வேலைத்திட்டத்தை ஒரு தலைமை திட்டமாக ஆரம்பித்துள்ளது என்றும் அவர்தெரிவித்தார்.
வியட்நாம், சீனா, மலேசியா போன்ற நாடுகள் தனியார் துறையோடு இணைந்து செயல்படுவதன் மூலமே தற்போதைய அபிவிருத்தியை பெற்றெடுத்துள்ளது. ஆகவே நமது நாட்டிலும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக தனியார்துறையோடு இணைந்து திமிங்கிலங்களை பார்வையிடும் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை நாட்டின் வழமான எதிர்காலத்தின் ஒரு சிறந்த அடையாளமாகும். இந்த வருடத்தில் மட்டும் 80 இலட்சமான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வந்தனர்.
சுற்றுலாத்துறை என்பது வெளிநாட்டு செலாவணியை ஈட்டெடுப்பதற்;காகவுள்ள ஒரு சிறந்த திட்டமாகும். இத் திமிங்கிலங்கள் மற்றும் டொல்பின் மீன்களைப் பார்வையிடும் வேலைத் திட்டமும் சுற்றுலாத்துறையில் அபிவிருத்திக்காகவுள்ள ஒரு சிறந்த வழியே ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமுத்திர பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் நாயகம் விஜய விக்கிரமரத்தின அவர்களும் இதனைப்பற்றி கருத்து தெரிவித்தார்.
0 comments:
Post a Comment