
(எஸ்.எம்.அறூஸ்)
அட்டாளைச்சேனை சம்புக்களப்பு வடிச்சல் திட்டத்தின் இரண்டாம் கட்டமான வளலவாய் மேற்கு, வளலவாய் கிழக்கு, இப்றாஹீம் பள்ளம் ஆகிய கண்டங்களுக்கான வடிச்சல் திட்டங்கள் ஆரம்ப விழா நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் அழைப்பின் பேரில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ்வடிச்சல் திட்டத்தினை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார், மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ். திலகராஜா, அம்பாறை பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.எல். சமன் வீரசிங்க, அம்பாறை மேலதிக நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.எல்.எம். அலியார், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் உட்பட நீர்ப்பாசன திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதற்கான சகல ஏற்பாடுகளையும் விவசாய சம்மேளனமும் அட்டாளைச்சேனை அபிவிருத்திக் குழுவும் மேற்கொண்டுள்ளது. நீரில் மூழ்கிக் காணப்படும் சுமார் 8000 ஏக்கர் நெற்காணிகள் இதன் மூலம் விவசாய செய்கைக்கு உட்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பல அரசியல்வாதிகளால் பராமுகமாகக்காணப்பட்ட இவ்வடிச்சல் திட்டம் இன்று ஆரம்பித்துவைக்கப்படுவதன் மூலம் இப்பிரதேசத்தின் பொருளாதாரத் துறையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பேற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment