Saturday, December 10, 2011

முள்ளிவளையில் 21 இலட்சம் ரூபா செலவில் முன்பள்ளி


(இர்ஷாத் றஹ்மதுல்லா) 
முல்லைத்தீவு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு தமது முழுமையான பங்களிப்பை வழங்கி வருவதாக கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு முள்ளிவளையில் 21 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளி பாடசாலை கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதற்கென வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ், நிதியினை முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகரத்னத்தின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் இந்த நிதியினை பெற்றுக் கொடுத்திருந்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, அரசாங்க அதிபர் என்.வேதநாயகம், ஆளுநரின் ஆணையாளர் எம்.மொஹிதீன் உட்பட் பலரும் கலந்து கொண்டனர்.




0 comments:

Post a Comment