Tuesday, December 13, 2011

குருநாகலில் வினாப் பத்திரங்களுக்கு பஞ்சம்; 30 நிமிடங்கள் தாமதம்


குருநாகல் கல்வி வலயத்தல் தெலியாகொன்ன ஹிஸ்புல்லா முஸ்லிம் வித்தியாலயத்தில் நேற்றய தினம் 13ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையின்போது தமிழ் மொழி மற்றம் வரலாறு ஆகிய பாடங்களின் முதலாம், இரண்டாம் பகுதிகள் மாணவர்களின் தொகைக்கு போதுமானதாக இருக்கவில்லை.

சுமார் 100 பரீட்சார்த்திகளுக்கு இவ்வாறு வினாப்பத்திரம் போதாமற் போயுள்ளது. வேறு பாடசாலைகளில் இருந்து வினாப்பத்திரங்களைக் கொண்டுவந்து பரீட்சையை அரம்பிக்கும்போது சுமார் 30 நிமிடங்கள் தமதமானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை 2011ஆம் ஆண்டு குருநாகல் மாவட்டத்தல் நடந்த இரண்டாவது சம்பவமே இது. ஆரம்ப நாள் 12 ஆம் திகதி பானகமுவ அந்நவர் முஸ்லிம் வித்தியாலயத்தில் இஸ்லாம் பாட வினாப்பத்திரத்திலும் இவ்வாறான சம்பவம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment