Tuesday, December 13, 2011

மரக்கறி விநியோகத்துக்கு இராணுவம் தயார்


(பஹமுன அஸாம்) 
தேவைப்படும் பட்சத்தில் மரக்கறி விநியோகத்துக்கும் விற்பனைக்கும் இராணுவம் தயாராக உள்ளது என இராணுவப் பேச்சாளர் நிகால் கபுஆராச்சி நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். நேற்று இரண்டாவது தினமாகவும் கொழும்பு மனிங் மற்றும் நாட்டில் இதர சில வியாபார ஸ்தானங்கள் மூடப்பட்டிருந்ததோடு வியாபாரிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்பாட்டங்கள் இன்று 3ஆவது நாளாகவும் தொடர்கின்றது. 

மரக்கறி விநியோகத்தின்போது கட்டாயம் பிளாஸ்டிக் கூடைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இதன் காரணமாக தற்போது நாடளாவியரீதியில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 28 பேர் நேற்றைய தினம் தம்புள்ளையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

மரக்கறிகள் மற்றும் பழ வகைகளை பிளாஸ்ரிக் கூடைகளில் கொண்டுசெல்வது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையில் இன்று புதன்கிழமை விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment