(நிதால்)
கல்பிட்டி பிரதேச சபை அபிவிருத்தி பணிகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 500 இலட்சம் ரூபாய்களை வழங்கியுள்ளதாக கல்பிட்டி பிரதேச சபை தலைவர் எம்.எச்.எம். மின்ஹாஜ் தெரிவித்தார். இந்நிதி மூலம் கல்பிட்டி பிரதேசசபை பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
கல்பிட்டி பிரதேச குடிநீர் விநியோக புனர்நிர்மாணப் பணிகளுக்காக 250 இலட்சம் ரூபாய்களும் நுரைச்சோலை பிரதேச வடிகால் அமைப்பிற்காக 30 இலட்சம் ரூபாய்களும் இந்த நிதி மூலம் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. கல்பிட்டி மற்றும் நுரைச்சோலை சந்தைகளும் இதன்மூலம் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன.
0 comments:
Post a Comment