Wednesday, December 28, 2011

முழுமையான திருத்தங்களுடன் உயர்தர பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன - எஸ்.பி.


மாவட்டமட்ட நிரற்படுத்தலில் தவறு ஏற்பட்டது உண்மையே. எனினும் இத்தவறு உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டு முழுமையான திருத்தங்களுடன் க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன  என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் குறித்த சந்தேகம் மாணவர்களுக்கு இருப்பின் பரீட்சை திணைக்களத்துடன் தொடர்பு கொண்டால் அவர்களது விடைத்தாள்கள் கூட பரீட்சித்து சந்தேகம் களையப்படுமென அமைச்சர் குறிப்பிட்டார்.

விஞ்ஞான பாடம் எடுத்தவர்களுக்கு வர்த்தக பாட பெறுபேறுகளும் வர்த்தக பாடம் எடுத்தவர்களுக்கு விஞ்ஞான பாட பெறுபேறுகளும் கிடைத்துள்ளதான முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. இது உண்மைக்கு புறம்பானது. பரீட்சை பெறுபேறுகளில் இவ்வாறான குளறுபடி ஏற்படவாய்ப்பில்லை. பரீட்சார்த்திகள் தமது சுட்டெண்ணை தவறுதலாக கணனியில் பதிவு செய்ததாலேயே இத்தவறு ஏற்பட்டுள்ளது என பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட் சைகளுக்குப் பொறுப்பான உதவி ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

2010ம் ஆண்டு நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் போது வழங்கப்பட்ட சுட்டிலக்கத்தை ஒரு சில மாணவர்கள் தவறுதலாக இம்முறை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்காக இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். இதனாலேயே அவர்களுக்கு தவறுதலான பெறுபேறுகள் கிடைத்துள்ளன. உண்மையில் அது அவர்களது பெறுபேறுகள் அல்ல என்றும் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் மற்றும் பரீட்சை நடவடிக்கை களுக்கு பொறுப்பான ஆணையாளர் அமித் ஜயசுந்தர உயர்கல்வி அமைச்சின் செயலர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ண பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க ஆகியோர் நேற்று உயர்கல்வி அமைச்சின் விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்தினர்.

0 comments:

Post a Comment