Wednesday, December 21, 2011

எலிக்காய்ச்சலினால் இதுவரை 5,893 பேர் பாதிப்பு, 78 இறப்புக்கள்


(எம்.ஐ.எம். பைஷல்) 
இவ்வருட ஆரம்பத்திலிருந்து கடந்த மாதம் 15ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் எலிக்காய்ச்சலினால் சுமார் 5 ஆயிரத்தி 893 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 78 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சின் தொற்று நோய்த்தடுப்பு பிரிவின் ஆய்வறிக்கை ஒன்றின் மூலம் அறியக்கிடைத்துள்ளன.

அவ்வறிக்கையின் மூலம் மேலும் அறியக்கிடைக்கையில், குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,511 பேர் எலிக்காய்ச்சலினால் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியதுடன், 11 பேர் மரணமடைந்துள்ளனர். இதற்கு அடுத்ததாக மேல் மாகாணத்தில் 1,254 பேர் பாதிக்கப்பட்டிருப்பதுடன் 28 பேர் மரணமடைந்துள்ளனர். அடுத்த நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 543 பேர் பாதிக்கப்படுள்ளதோடு அவர்களில் 5 பேர் மரணமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

மேலும், நீர் தேங்கி நிற்கும் இடங்களில் எலியின் சிறுநீரிலுள்ள பக்றீரியா நோய்க் கிருமி கலப்பதனால் உடலிலுள்ள காயங்களினூடாக இந்நோய்க் கிருமி உட்செல்லப்படுவதனாலேயே எலிக்காய்ச்சல் உண்டாகின்றது. எனவே நீர் தேங்கி நிற்கும் இடங்களில் வேலை செய்யும் போதும், வயல்வெளிகளில் வேலை செய்யும்போதும் மிக அவதானத்துடன் செயற்படும் படியும் வீட்டுச் சூழல் மற்றும் பாவனைக்கு பயன்படுத்தும் சகல பாத்திரங்களையும் சுத்தமாக வைத்து கையாளும் படியும் சுகாதாரத்துறையின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளன.

0 comments:

Post a Comment