Wednesday, December 21, 2011

கொங்கோ இராச்சியத்தின் புதிய ஜனாதிபதி ஜோசப் கபீலா


கொங்கோ இராச்சியத்தின் புதிய ஜனாதிபதியாக ஜோசப் கபீலா பதவிப் பிரமாணம் செய்துள்ளார். பதவியேற்பதற்கான சத்தியப்பிரமாண நிகழ்வுகள் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளன. இதன்போது அந்நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பதாக கொங்கோ இராச்சியத்தின் புதிய ஜனாதிபதி  உறுதியளித்துள்ளார்.

40 வயதான ஜோசப் கபீலாவின் பதவிப்பிரமாண நிகழ்வுகள் அந்நாட்டின் ஜனாதிபதி தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று அவர் வெற்றிபெற்றார். எனினும் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைகளில் மோசடி இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியிருந்தனர். அதன் காரணமாக வாக்கெண்ணும் நடவடிக்கைகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில் தேர்தல் நடவடிக்கைகள் நியாயமான முறையிலேயே இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய ஜனாதிபதியின் பதவிப்பிரமாணத்தை முன்னிட்டு கொங்கோ இராச்சியத்தில் நேற்றைய தினம் அரச விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment