
(கலாநெஞ்சன்)
நீர்கொழும்பு நகரில் நத்தார் மற்றும் புது வருட வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. நகரின் வரத்தகப் பிரதேசத்தில் தற்காலிக நடை பாதை கடைகள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்மஸ் மரங்கள் வாழ்த்து மடல்கள் அலங்காரப் பொருட்கள் ,விளையாட்டுப் பொருட்கள் , ஆடைவகைகள், பரிசுப் பொருட்கள, வீட்டுப் பொருட்கள் என பலவிதமான பொருட்கள் நடை பாதை கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
அத்துடன். நகரில் உள்ள வாத்தக நிலையங்கள் பலவற்றில் மலிவு விற்பனைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையான பொது மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகரின் வரத்தகப் பகுதிக்கு வருவதை காணக் கூடியதாக உள்ளது. அத்துடன் 'நத்தார் தாத்தா' இரவு வேளைகளில் வீடுகளுக்கு சென்று சிறுவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் வழங்குதையும் காணக் கூடியதாக உள்ளது
நடை பாதை கடைகள் சிலவற்றில் ஆடை வகைகள், கிறிஸ்மஸ் மரங்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனை செயய்யப்படுவதையும் பொது மக்கள் அவற்றை கொள்வனவு செய்வதையும், 'நத்தார் தாத்தா' வீடுகளுக்கு செல்வதையும் படங்களில் காணலாம்.





0 comments:
Post a Comment