Wednesday, December 28, 2011

"மலடி புள்ளப் பெத்த கதை" ; வெளியான A/L ரிசல்ட்


இப்போ என்ன பம்மாத்து நடக்குது எண்டு தெரியலப்பா. புள்ளயல் எக்ஸ்சாம் ரிசல்ட் எல்லாம் பிழை எண்டு சொல்லி திரியிறாங்க. இல்ல அது சரி எண்டு அமைச்சர்மார் சொல்றாங்க. இந்தமுறை ரிசல்ட் வாறது "மலடி புள்ளப் பெத்த கதையாத்தான்" இருக்கு. அன்னா, இன்னா எண்டு இழுத்துகிட்டு இருந்திச்சி. பொறகு நம்முட ஜனாதிபதி தலையிட்டு அவசரமா ரிசல்டை வெளியிட சொன்னார்.

ரிசல்ட் வர பிந்தினதால ஆர்ப்பாட்டம் எல்லாம் வெச்சாங்க தானே. முக்கி முக்கி வந்த ரிசல்ட் கடசில முட்டி கிட்டு நிண்டுடிச்சி. டிஸ்ட்ரிக், ஐலேன்ட் ரேங் எல்லாம் பிழையாம் பாருங்கோ. பொறகு அதை திருத்தி வெளியிட்டாங்க. அதுலயும் குளறுபடி இருக்கு எண்டும், அதை நம்ப வேணாம் எண்டும் பல அறிக்கைகள் வந்திச்சிதானே.

புள்ளைகள் முதல் நல்ல ரேங் வந்து, மாத்தின பிறகு ரேங் பின்னுக்கு வந்தா ரொம்ப பாதிக்கப்படுவாங்க. இது தெரியாம ரிசல்டுல எல்லோரும் சேர்ந்து விளையாடுறாங்க. நான் ஒண்டு மட்டும் கேட்க விரும்புறேன், ரிசெல்ட் வெளியிடுறதுக்கு Z ஸ்கோர் பார்க்கிறவங்க இந்தமுறை என்ன லீவுலையா போயிட்டாங்க....? இவ்வளவு இழுத்து அடிக்கிறீங்க. A/L எக்ஸ்சாம் என்கிறது வாழ்கையை தீர்மாணிக்கிறது, Playground இல்ல. நான் ஒரு வாத்தியாரா இருந்திட்டு இதை தட்டி கேக்காட்டி நான் இருக்கிறதுக்கு அர்த்தமே இல்ல

- மண்டு வாத்தியார்

0 comments:

Post a Comment