(எம்.ஐ.எம். பைஷல்)
அரசாங்கத்தினால் நடாத்தப்படும் பரீட்சைக் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களின் கொடுப்பனவை இரு மடங்காக வழங்குமாறு இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ.பி.கமால்டீன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவை முன்வைத்து அதனை ஈடுசெய்யக் கூடிய வகையில் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும். மேற்படி ஊழியர்கள் பரீட்சை நடைபெறும் தினத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து தத்தமது பரீட்சை மண்டபத்திற்குச் சென்று அன்றைய தினம் கடமையில் ஈடுபட்டு மாலை 5.30 மணியளவில் வீடு திரும்புகின்றனர்.
மேலும் மறுநாள் காலை பரீட்சை கடமைக்குச் செல்வதற்காக வேண்டி குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகாலை வேளை 4 மணிக்கு எழுந்து பரீட்சை கடமைகளுக்கான ஆயத்தங்களை செய்து கொண்டு கடமைகளுக்குச் சென்று விடுகின்றனர். இவ்வாறான கஷ்டத்திற்கு மத்தியில் செயற்படும் உழியர்களுக்கு கொடுக்கப்படும் வேதனம் போதுமானதாக இல்லை.
இன்றைய காலகட்டத்தில் ஒரு கூழித்தொழிலாளி பெற்றுக் கொள்ளும் ஒருநாள் சம்பளமாக ஆயிரத்திற்கு மேல் பெறுகின்ற சம்பளம் கூட அரச ஊழியர்களுக்கு கிடைப்பதில்லை. ஆனால் பரீட்சைக் கடமை என்பது மிகப் பொறுப்பு வாய்ந்ததும், கண்ணியமிக்கதுமான ஒரு வேலையாகம். இக்கடமைகளைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நாளந்தக் கொடுப்பனவு போதுமானதாக இல்லை. இக்கொடுப்பனவை இரட்டிப்பாக்கி வழங்குமாறு இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டிக் கொண்டுள்ளதாக இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ.பி.கமால்டீன் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment