Tuesday, December 20, 2011

டெங்கு நோயினால் பலர் பாதிப்பு, எதிர்பார்த்த பலனை அடைய முடியவில்லை



(எஸ்.எல்.மன்சூர்) 
வருடம் முழுவதும் நாட்டிலுள்ள மக்களை அச்சத்திற்குள்ளாக்கி வரும் டெங்கு நோய்த்தாக்கம் கடந்த 5 வருடங்களில் 851 பேரை பலிகொண்டுள்ளது எனவும் சுமார் 1,18,108 பேர் இந்த உயிர் கொல்லி நோயான டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்துவதற்காக கியூபா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பக்றீரியாக்களும் சரியான முறையில் செயற்படவில்லை என்றும் கூறும் அமைச்சர் மக்கள் சரியாக இயங்கி தங்களுடைய சுற்றாடல்களை சரியான முறையில் தூய்மைப்படுத்துகின்ற போது டெங்கு ஒழிப்பை மேற்கொள்ள முடியும். இதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு நல்கின்றபோதுதான் உயிர்கொல்லி டெங்கை முற்றாக தடைசெய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

தற்போது பெய்துவரும் அடை மழையிலும் கிழக்கு மாகாணத்தில், கல்முனை பகுதியில் பலர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0 comments:

Post a Comment