(ஏ.ஜே.எம்.ஹனீபா)
அரசாங்கத்தின் காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் 2008/04 ஆம் சுற்று நிருபத்துக்கு அமைவாக முதன்முறையாக கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை கிராமத்தை சேர்ந்த 123 குடும்பங்களுக்கு காணி உத்தரவுப் பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஏ. மன்சூர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் அதிதிகளாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டீ அல்வீஸ் மற்றும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டீ.டீ. அனூர தர்மதாச, அம்பாரை மாவட்ட காணி நிர்வாக உத்தியோகத்தர் கே.எல்.முசம்மில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏனைய அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.றாபி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், மாவட்ட பதிவாளர் சீ.எம்.எம். சத்தார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது காணி கட்டளை சட்டங்கள் தொடர்பாகவும் அதனை கையாழ்வதில் உள்ள சட்டச் சிக்கல்கள் தொடர்பாக அதிதிகளினால் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டதுடன் புதிய காணி உத்தரவுப் பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments:
Post a Comment