நோர்வே தூதரகத்தினால் இன்று வெள்ளிக்கிழமை 18.5 மில்லியன் ரூபா நிதி பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பயண செலவுகளுக்காக அன்பளிப்பாக வழங்கப்பட்டது. சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் கீழ் கடமையாற்றும் பெண் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியின் ஊடாக 120 மோட்டார் சைக்கிள்கள் கொள்னவு செய்யப்பட்டு, இதுவரை காலமும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக முறையாக செயற்பட முடியாமலிருந்த பெண் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக பால்நிலை சார்பு வன்முறைகளுக்கு எதிரான வகையிலான நிலையான விளம்பர பலகைகளை காட்சிப்படுத்தவும் குறித்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் ஊடாகவே இந்நிதி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள நோர்வே தூதுவராலயத்தில் இடம்பெற்றது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹில்டா ஹரல்ஸ்டட் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதி லினா கிறிஸ்ரியன்ஸென் ஆகியோர் கையொழுத்திட்டனர்.
இந்நிகழ்வில் சிறுவர் அபவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த மற்றும் சிறுவர் அபவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



0 comments:
Post a Comment