Friday, December 02, 2011

கல்வி அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினராக மோகான் கிரேரு நியமனம்


(கலாநெஞ்சன்)  
ஆளுங் கட்சிக்கு மாறிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மோகான் கிரேரு கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனக்கடிதம் ஜனாதிபதியினால் மோகான் கிரேருவிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

வரவு-செலவுத்திட்டதின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மோகான் கிரேரு, வரவு செலவுத்திட்டதிற்கு ஆதரவு தெரிவித்ததுடன், எதிர்க்கட்சியில் இருந்து ஆளுங்கட்சிக்கு மாறியமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment