(ஏ.ஜே.எம்.ஹனீபா)
இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் மரமுந்திரிகை செய்கையை ஊக்குவிக்கும் நோக்குடன் 4000 மரமுந்திரிகை கன்றுகளை மானிய அடிப்படையில் வழங்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக ஒலுவில் - 07ஆம் கிராமத்தில் மரநடுகை மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்வும் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் அம்பாறை மாவட்ட மேற்பாவை உத்தியோகத்தர் ரீ. சிவகுமார், கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நியாஸ், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.கே. றகுமத்துல்லா உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகள், கிராமேதய சபை உறுப்பினர்கள் மற்றும் கிராம வாசிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment