Wednesday, December 21, 2011

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இதய அறுவை சிகிச்சை பிரிவு


(எஸ்.ஜி.உதயா) 
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் இதய அறுவை சிகிச்சைப் பிரிவு எதிர்வரும் 24 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் குறித்த வைத்தியசாலையின் இதய அறுவை சிகிச்சை பிரிவு தொடர்பாக பல தகவல்கள் வெளியிடப்பட்டன. அவற்றை கருத்திற்கொண்டு அது தொடர்பாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சினால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய வைத்தியசாலையில் இதய அறுவை சிகிச்சைப் பிரிவு தொடர்பாக அறிக்கையொன்றை சுகாதார அமைச்சிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்;பட்டது. குறித்த இதய அறுவை சிகிச்சை பிரிவில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக அதனை பயன்படுத்துவதில் காலதாமதம் ஏற்ப்பட்டுள்ளது. எனினும் தற்போது குறித்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதால் அதனை மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment