Saturday, December 17, 2011

இளைஞர் கழகங்களின் செயற்பாடுகள் குறித்து ஆராயும் மாநாடு


தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வடமேல் மாகாணத்திலுள்ள இளைஞர் கழகங்களின் செயற்பாடுகள், முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் மாநாடு அண்மையில் இடம்பெற்றது. இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக இந்த வருடம், அடுத்த வருடம் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டம் என்பனவற்றின் செயற்பாடுகள் பற்றியும் இங்கு கழக உறுப்பினர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலுக்கு பிரதம அதிதியாக இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி பிரதியமைச்சர் துமிந்த திசாநாயக்க, இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா, மன்றதின் மாகணப் பணிப்பாளர்கள், இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு இவ்வகையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது இது முதற்தடவை என கழக உறுப்பினர்கள் பெரிதும் பாராட்டி உரை நிகழ்த்தியமை இங்கு முக்கிய விடயமாக இருந்தது. இந்நிகழ்வில் பிரதியமைச்சர் துமிந்த திசாநாயக்க இளைஞர்கள் மத்தியில் உரையாற்றினார்.





0 comments:

Post a Comment