Friday, December 16, 2011

ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் வதிவிட பயிற்சி நெறி


( பாத்திமா ரினோஸா) 
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் இஸ்லாமிய வதிவிட பயிற்சி நெறியொன்றினை நடாத்தவுள்ளது. க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதிய அல்லது அந்த வயதுடைய மாணவர்களுக்காக 5 நாள் இஸ்லாமிய வதிவிட பயிற்சி நெறியொன்று நடளாவிய ரீதியில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினால் நடாத்தப்படவுள்ளது.

அறிவு, ஆன்மீகம், திறன் விருத்தி தொடர்பான செயற்பாடுகளில் பயிற்சிகள் வழங்கப்படும். அதேவேளை எதிர்கால கல்வி ஆலோசனைகளும் இங்கு வழங்கப்படவுள்ளது. 2011ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் இஸ்லாமிய வதிவிட பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்கலாம். 

0 comments:

Post a Comment