Saturday, December 31, 2011

அப்படிச் சொல்லவில்லை - யாழ். மாநகர சபை உறுப்பினர்


"முஸ்லிம் நாய்களை யாழ்ப்பாணத்தில் விட்டது தவறு" என்னும் தலைப்பில் வெளியான மேற்படி செய்தி போலியான இட்டுக்கட்டப்பட்ட சபையில் நடைபெறாத ஒரு செய்திக்குறிப்பாகும். அத்தோடு இது தமிழ் முஸ்லிம் உறவை திட்டமிட்டுக் குழப்பும் செயல் என்பதையும்  கவனத்தில் கொள்ளவேண்டும். மேற்படி செய்திக்குறிப்பை வெளியிட்டமையானது என் மீதும் எனது அரசியல் வாழ்வின் மீதும் சேறு பூசும்  நடவடிக்கையேயாகும்.

யாழ். மாநகர சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் எஸ்.விஜயகாந்த் கொண்டுவந்த "காணமல் போனோர் மற்றும் தடுப்பில் உள்ளோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோறும் ஜனாதிபதிக்க்கான மகஜர் மீது விவாதங்கள் நடைபெற்றபோது குறித்த மகஜரில் இருக்கும் குறைபாடுகளை நான்  எடுத்துக்கூறினேன், அவற்றில் இருக்கும் ஜனநாயக விரோத வரிகளை எடுத்துக் கூறினேன்.

அதேபோல பிரதி மேயர் ரமீஸ் அவர்களும் தமது கருத்துக்களை முன்வைத்தார், அப்போது நாட்டில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட இழப்புகளுக்கு தமிழ் ஆயுதக்குழுக்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார் அதற்கு மறுப்புத்தெரிவித்த நான் தமிழ் ஆயுதக்குழுக்கள் மட்டுமல்ல முஸ்லிம் ஆயுதக் குளுக்க்களும்தான் பதில் சொல்ல வேண்டும் என்றேன், இதுதான் எனது உரையே தவிர இங்கே செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதைபோல எவ்வித மோசமான வார்த்தைப் பிரயோகங்களும் அங்கே இடம் பெறவில்லை.

யாழ் மாநகர சபையில் குழப்பங்கள் நடந்தன, அது வேறு காரணங்களுக்கானதாகும்.  எனவே என்மீது ஏற்படுத்தப்பட்டுள்ள தப்பான எண்ணங்களுக்கும், தமிழ் முஸ்லிம் உறவு குறித்த எமது கட்சியின் நிலைப்பாடுகளின் மீது தோற்றுவிக்கப்பட்டுள்ள கலங்கத்திற்கும் பரிகாரம் அவசியமாகும்.

- என்.கே. வித்தன் (யாழ் மாநகர சபை உறுப்பினர்)

0 comments:

Post a Comment